தமிழகத்தில் போராட்டம் நடத்துவது சரியல்ல: சித்தராமையா

தமிழகத்தில் போராட்டம் நடத்துவது சரியல்ல: சித்தராமையா

இந்தியா செய்திகள்

தமிழகத்தில் போராட்டம் நடத்துவது சரியல்ல: சித்தராமையா

03 Apr 2018

தமிழ்நாட்டில் காவிரி நதிநீர் பிரச்சினை பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள் என பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் அறிவித்துள்ளன. அந்த வகையில், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ரெயில் மறியல், கடையடைப்பு, வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு என்று பல்வேறு போராட்டங்கள் நடைபெற இருக்கின்றன.

இந்த நிலையில்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது சரியல்ல என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். மைசூரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சித்தராமையா கூறுகையில்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, ஏப்.5-இல் தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. கர்நாடக சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக முழு அடைப்புப் போராட்டங்களில் தமிழக அரசியல் கட்சியினர் ஈடுபட முனைந்துள்ளனர். இது சரியான அணுகுமுறை அல்ல.

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சாதகமாக ஆணை பிறப்பிக்கவில்லை. காவிரி ஆற்றுநீரைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களுக்கு இடையே தனது தீர்ப்புப்படி முறையாக நீரை பகிர்ந்து கொள்வதற்காக செயல் திட்டம் (ஸ்கீம்) வகுக்க வேண்டும் என்றுதான் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது தமிழகத்தின் அழுத்தம் தரும் தந்திரத்துக்கு இணங்காமல், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் சரியான உத்தரவை பிறப்பிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது மேக்கேதாட்டு அணையை கட்டும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் காங்கிரஸ் அரசு உறுதியாக உள்ளது” என்றார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்